ஓர் பாலின ஈர்ப்பு குற்றமா? விரைவில் சட்டம் ரத்து?

Jul 11, 2018, 13:43 PM IST

ஓர் பாலின ஈர்ப்பைக் குற்றமாக கருதும் சட்ட சாசனப் பிரிவு 377 குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்த வருகின்றன.

இது குறித்து கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம், ‘பிரிவு 377, சட்ட சாசனத்தை மீறும் வகையில் இருக்கிறது’ என்று தீர்ப்பளித்தது. ஆனால், 2013 ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கில், ‘பரிவு 377 செல்லும்’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து, பிரிவு 377-ஐ முழுவதுமாக சட்டத்திலிருந்து நீக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்தான வழக்கு விசாரணையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், குவாலிகர், சந்திராசுந்த், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘377-வது சட்டப் பிரிவு சட்ட சாசனத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். ஏனென்றால், சட்ட சாசனத்தையே அது மீறும் வகையில் இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் வகுக்கப்பட்ட சட்டங்களே இன்று காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. பின்னர் எப்படி 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம் தற்காலத்துக்கு பொருந்தும்’ என்று வாதிட்டார்.

பிரிட்டன் காலத்திய சட்டங்கள் தொடர்ந்து சட்ட சாசனத்தில் ஓர் அங்கமாகத் தொடர சுதந்திரத்துக்குப் பிறகு இயற்றப்பட்ட சாசனத்தின் அடிப்படைக் கூறுகளை மீறக் கூடாது என நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதனால், ஓர் பாலின ஈர்ப்பைக் குற்றமாக பாவிக்கும் சட்டம் சீக்கிரமே ரத்து செய்யப்படும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading ஓர் பாலின ஈர்ப்பு குற்றமா? விரைவில் சட்டம் ரத்து? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை