இனி நம் விவசாயிகள் நிம்மதியாக சுவாசிப்பார்கள்- பிரதமர் மோடி

Jul 11, 2018, 16:04 PM IST

‘விவசாயப் பயிர்களுக்கான அடிப்படை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் இனி அவர்கள் நிம்மதியாக தூங்கலாம்’ என்று தனது பிரச்சார உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சண்டிகரிலிருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் பாஜக மற்றும அகாலி தளம் ஆகிய கட்சிகள் இணைந்து இன்று ‘நன்றி செலுத்தும்’ பேரணியை நடத்தின. வெயில் காலத்தில் பயிரிடப்படும் 14 விளை பொருட்களுக்கான அடிப்படை விலையை மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தி உத்தரவு பிறப்பித்தது.

இதைக் கொண்டாடும் வகையிலேயே இந்தப் பேரணி ஒருங்கிணைக்கப்பட்டது. இது குறித்து பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘நாட்டில் விவசாயிகள் தான் முதலாவதாக கவனிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியிலிருந்த அரசு விவசாயிகளின் தேவைகளை புரிந்து கொள்ளவே இல்லை’ என்று காங்கிரஸை தாக்கினார்.

14 பயிர்களுக்கு அடிப்படை விலையேற்றப்பட்டுள்ளதால், அரசுக்குக் கூடுதலாக 15,000 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. அடிப்படை விலையேற்றம் குறித்து மோடி, ‘இனி நம் விவசாயிகள் நிம்மதியாக சுவாசிக்கலாம். அவர்கள் அதிகமாக சம்பாதிக்க முடியும். அதேபோல நிம்மதியாகவும் தூங்க முடியும்’ எனப் பேசினார்.

You'r reading இனி நம் விவசாயிகள் நிம்மதியாக சுவாசிப்பார்கள்- பிரதமர் மோடி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை