தாஜ்மஹாலை இடிக்கச் சொல்லிவிடுவோம்- கொந்தளித்த உச்ச நீதிமன்றம்

Jul 11, 2018, 19:55 PM IST

'தாஜ்மஹாலை மூடிவிடுவோம் அல்லது இடித்துத் தள்ள உத்தரவிட்டுவிடுவோம்’ என பொறுமையின் எல்லை கடந்து தாஜ்மஹால் பராமரிப்பு அதிகாரிகளையும் மத்திய அரசையும் உத்தரபிரதேச அரசையும் உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹாலை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். இத்தனைப் பெருமைமிகு அடையாளம், இன்று தன் அடையாளத்தை தொலைத்துவிட்டு நிற்பதற்கான காரணம் மாசடைந்த சுற்றுச்சூழல்.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த பொது நல வழக்கில், ‘தாஜ்மஹாலின் அழகைப் பாதுகாக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அதிகாரிகளின் மெத்தனப் போக்கின் காரணமாகத் தான் இன்று தாஜ்மஹால் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் சின்னமாகி நிற்கிறது’ என கண்டனம் தெரிவித்தது உச்ச நீதிமன்றம்.

மேலும், தாஜ்மஹால் பாதுகாப்பு மண்டல் தலைவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்த வழக்கின் இரண்டாவது அமர்வில், ”தாஜ்மஹாலை ஒரு பொறுப்பு உணர்வுடன் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். அல்லது இந்த உச்ச நீதிமன்றம் தாஜ்மஹாலை மூட அல்லது இடித்துத் தள்ள உத்தரவிடும்” என ஆதங்கத்துடன் தெரிவித்தது.

 

You'r reading தாஜ்மஹாலை இடிக்கச் சொல்லிவிடுவோம்- கொந்தளித்த உச்ச நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை