50 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க நரேந்திர மோடி திட்டம்

50 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார் நரேந்திர மோடி

Jul 14, 2018, 09:57 AM IST

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் நாடு முழுவதும் 50 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

Narendra Modi

2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைத் தொடர பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் 50 பொதுக்கூட்டங்களில் நரேந்திர மோடி பங்கேற்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுக்கூட்டம், 2 அல்லது 3 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், கூட்டம் ஒவ்வொன்றிலும் லட்சக்கணக்கான மக்களை பங்கு பெற வைக்கவும் திட்டமிட்டு வருகின்றது.

இதைப்போல பாஜகதேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோரும் தலா 50 கூட்டங்களில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் செவளியாகியுள்ளன. இந்த 200 பொதுக்கூட்டங்கள் மூலம் தேர்தலுக்கு முன் 400–க்கும் மேற்பட்ட தொகுதி மக்களை பாஜக தலைவர்கள் சந்திக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கார், வாரணாசி, மிர்சாபூர் ஆகிய இடங்களில் இன்று நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கே பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

You'r reading 50 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க நரேந்திர மோடி திட்டம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை