தென் மேற்குப் பருவமழையால் கேரள மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென் மேற்குப் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளாவில் இதுவரையில் கனமழையின் காரணமாக 13 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும், புயல் காற்றுடன் கூடிய கனமழைக்கு இதுவரையில் ஆறு பேர் காணமல் போயுள்ளனர்.
கேரளாவில் இந்த ஆணு தென் மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விடவும் கணித்ததை விடவும் அதிகமாகப் பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாள்களுக்கு கேரள மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தி உள்ளது.
தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோட்டயம், எர்ணாகுளம், வயநாடு, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.