மோடி முதல் கோலி வரை - இந்த ஆண்டின் ட்விட்டர் ஹீரோக்கள்

டுவிட்டர் தளத்தில் 2017 ஆம் ஆண்டில் எவையெல்லாம் டிரெண்டிங்கில் இருந்தன என்ற புள்ளிவிரங்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

by Lenin, Dec 17, 2017, 13:37 PM IST

ட்விட்டர் தளத்தில் 2017 ஆம் ஆண்டில் எவையெல்லாம் டிரெண்டிங்கில் இருந்தன என்ற புள்ளிவிரங்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Obama, Virat Kohli Twitter

இன்றைய இளம் தலைமுறையினருக்கு கருத்துப் பரிமாற்றம் முதல் கிண்டல் செய்வது வரை அத்தனைக்கும் சமூக வலைத்தளங்கள் முதலிடம் வகிக்கின்றன. கமல் தொடங்கி பக்கத்து தெரு குப்பன் வரை தங்களது கருத்துப் போரை சமூக வலைத்தளங்களில் நிகழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், டுவிட்டர் தளத்தில் 2017 ஆம் ஆண்டில் எவை எல்லாம் டிரெண்டிங்கில் இருந்தன என்ற புள்ளிவிரங்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பராக் ஒபாமா:

அந்த வகையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ராபர்ட் லீ சிலை அகற்றப்படப் போவதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் கிடைத்தது. இதனைக் கண்டித்து வலதுசாரி வெள்ளை இனத்தைச் சேர்ந்த பிரிவினர் பேரணி நடத்தினர்.

இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினரும் பேரணி நடத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கலவரத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது டுவிட்டர் பக்கத்தில், “மற்றவரின் நிறம், பின்னணி, மதம் ஆகியவற்றின் அடிப்படியில் பிறரை வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை” என்ற கருத்தை பதிவிட்டார்.

இந்தப் பதிவு 4.6 மில்லியன் லைக்குகளை பெற்று இந்தாண்டு அதிக லைக்குளை பெற்ற பதிவு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

நக்ஸ் பார் கார்ட்டர் என்ற ஹேஸ்டேக்கின் கீழ் பதிவு செய்யப்பட்ட டுவிட்டுகள் 3.6 மில்லியன் முறை ரீடுவிட் செய்யப்பட்டு அதிக ரீடுவிட் செய்யப்பட்டுள்ளது என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

நரேந்திர மோடி:

இந்திய அளவில் அதிகம் பேர் பின் தொடர்பவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தில் உள்ளார். அவரை 37.7 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். கடந்தாண்டை விட இது 52 சதவீதம் அதிகம் ஆகும்

மோடிக்கு அடுத்த படியாக 31. 7 மில்லியன் பேருடன் அமிதாப்பச்சன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 31 மில்லியன் பேருடன் ஷாருக்கான் மூன்றாம் இடத்திலும், 28. 8 மில்லியன் பேருடன் சல்மான்கான் நான்காவது இடத்திலும், 23 மில்லியன் பேருடன் அக்சய் குமார் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இவர்களைத் தவிர்த்து ஆமீர் கான் (6 வது இடம்), தீபாக படுகோன் (7 வது இடம்), கிருத்திக் ரோசன் (9 வது இடம்) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

கிரிகெட் பிரபலங்கள்:

இந்தப் பட்டியலில் இந்தாண்டுதான் முதல் முறையாக சச்சினும், விராட் கோலியும் இடம் பிடித்துள்ளனர். 22 மில்லியன் பேருடன் சச்சின் எட்டாது இடத்திலும், 21 மில்லியன் பேருடன் கோலி பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

You'r reading மோடி முதல் கோலி வரை - இந்த ஆண்டின் ட்விட்டர் ஹீரோக்கள் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை