இந்தியாவில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட பெண்களுக்கு இல்லை: சிவசேனா

Jul 23, 2018, 22:55 PM IST

இந்தியாவில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட பெண்களுக்கு இல்லை என்று சிவசேனாவில் தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை குறிப்பிட்டு பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் பசுக்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன. ஆனால், பெண்கள் பாதுகாப்பாக இல்லை.

பாஜகவின் இந்துத்துவா கொள்கை என்பது போலியானது. இந்தியாவில் இந்துத்துவா கொள்கையை பின்பற்றப்பட வேண்டும். நாங்கள் பசுக்களை பாதுகாக்க வேண்டாம் என கூறவில்லை. பசுக்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்தியதால் பெண்கள் பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியைப் போல தான் இப்போது பாஜக ஆட்சி நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading இந்தியாவில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட பெண்களுக்கு இல்லை: சிவசேனா Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை