கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 கோடி பிரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் கருப்பு பணம், பினாமி சொத்துக்கள் என சட்டத்திற்கு விரோதமான செயல்கள் நடந்து வருகிறது. இதனால், கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பினாமி சொத்துக்கள், கருப்பு பணம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரை பரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைதவிர, வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை வெகுமதி அளிக்கப்படுகிறது. இதேபோல், பினாமி சொத்துக்கள் குறித்து சரியான தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சரியான தகவல் அளித்தால் ரூ.5 கோடி வரை பரிசு அளிக்கப்படுகிறது.
கருப்பு பணம், பினாமி சொத்துக்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், தவறான தகவல் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.