எச்சரிக்கை! - வங்கிகளை அம்பானிக்கோ, அதானிக்கோ விற்றுவிடும் நிலை வரலாம்!

பொதுத்துறை வங்கிகள் சரிவரச் செயல்படவில்லையென்ற கருத்து உருவானால் கூட அந்த வங்கியை அம்பானிக்கோ அதானிக்கோ விற்றுவிடக்கூடிய நிலை உருவாகலாம் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க ப

Dec 19, 2017, 12:21 PM IST

பொதுத்துறை வங்கிகள் சரிவரச் செயல்படவில்லையென்ற கருத்து உருவானால் கூட அந்த வங்கியை அம்பானிக்கோ அதானிக்கோ விற்றுவிடக்கூடிய நிலை உருவாகலாம் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளருமான தாமஸ் பிராங்கோ தெரிவித்துள்ளார்.

State bank and Ambani

இது தனியார் செய்தி இதழுக்கு அளித்துள்ள நேர்காணலி, “மத்திய பாஜக அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள ‘நிதித் தீர்வு வைப்புத்தொகை காப்பீடு மசோதா (எஃப்ஆர்டிஐ) “வங்கிகளில் வாடிக்கையாளர்களின் சேமிப்புப் பணத்தைச் சூறையாடி, கடுமையான பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்கள் பணம் சூறை:

பொதுவாக வங்கிகள் திவால் ஆனால் குறிப்பாக அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் திவால் ஆனால் அரசாங்கங்கள் முன்வந்து அந்த வங்கிக்கு நிதி அளித்து அந்த வங்கியையும் அந்த வங்கியில் பணம் போட்டுள்ள வாடிக்கையாளர்களையும் காப்பாற்றும். இதற்கு “பெயில் அவுட் ’’ என்று பெயர்.

ஆனால் தற்போது நிறைவேறவுள்ள சட்டம், வங்கி திவால் ஆனால் அந்த நட்டத்தை அதில் பணம் போட்டுள்ளவர்களே ஈடுகட்டிக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது அமெரிக்க அரசு பணம் கொடுத்து நிதி நிறுவனங்களைக் காப்பாற்றியது. பின்னர் இது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தது.

தற்போது வங்கியில் போடும் பணத்திற்கு உத்தரவாதம் உள்ளது. நீங்கள் போடும் பணத்தை நீங்கள் விரும்பும் நேரத்தில் திரும்பப் பெறலாம். ஆனால் மேற்படி புதிய சட்டம் நிறைவேற்றப்படுமானால் ஒரு வராக்கடனை வசூலிக்கமுடியாமல் நட்டமடைந்தால் நீங்கள் வங்கியில் போட்ட பணம் திரும்பக் கிடைக்காது. “பெயில் இன் ’’ என்ற கருத்துப்படி அதன் வாடிக்கையாளர்களே அந்த நட்டத்தை ஈடுகட்டிக்கொள்ள வேண்டும்.

நம்நாட்டு நிதியமைச்சர் வங்கி நிர்வாகிகளுக்கும் பணம் செலுத்தாதவர்களுக்கும் இடையில் ரகசியத் தொடர்பு இருக்கிறது; அதனால் தான் பணம் திரும்பக் கிடைப்பதில்லை” என்று கூறுகிறார்.

வங்கியை அம்பானிக்கோ அதானிக்கோ விற்றுவிடக்கூடிய நிலை உருவாகலாம்:

மேலும், அவர் கூறுகையில், “மாநில அரசாங்கங்களிடம் கருத்துக்கூட கேட்காமல் தன்னிச்சையாக எந்த ஒரு முடிவு எடுக்கவும் இந்த நிதி ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரமும் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிதி ஸ்திரத்தன்மை குழுமத்தின் கட்டுப்பாட்டில் வந்து விடும்.

வங்கிகளை உடனடியாக தனியார்மயமாக்காவிட்டாலும் வருங்காலத்தில் தனியார் மயமாக்கும் அபாயம் உள்ளது. தற்போது மத்திய அரசு ஜன்தன், முத்ரா, பென்சன் திட்டங்களுக்குப் பொதுத்துறை வங்கிகளை நம்பித்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இதற்கு மட்டும் பொதுத்துறை வங்கிகளை நம்பியிருக்கும் மத்திய அரசு படிப்படியாக வங்கிகளை தனியார்மயமாக்கும் நோக்கில் இந்தச் சட்டத்தை கொண்டுவரவுள்ளது. ஒரு வங்கி சரிவரச் செயல்படவில்லையென்ற கருத்து உருவானால் கூட அந்த வங்கியை அம்பானிக்கோ அதானிக்கோ விற்றுவிடக்கூடிய நிலை உருவாகலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading எச்சரிக்கை! - வங்கிகளை அம்பானிக்கோ, அதானிக்கோ விற்றுவிடும் நிலை வரலாம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை