டெல்லி செங்கோட்டையில் இன்று 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.
நாட்டின் 72வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, நாட்டின் தலைநகரான டெல்லியில் செங்கோட்டையில் சுதந்திர தின விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.
பிறகு, முப்பைகளின் அணி வகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக் கொண்டார். இந்திய நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி பின்னர் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்தியா, சர்வதேச அளவில் வலிமையான பொருளாதார நாடுகள் பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது. பல துறைகள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.
பாஜக ஆட்சியில் எய்ம்ஸ், ஐஐடி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை இந்திய அரசு உறுதி செய்துள்ளது. பேரிடர் காலத்திலும், போர்க்காலத்திலும் நமது ராணுவ வீரர்களின் வீரதீர செயல்கள் பாராட்ட கடைமைப்பட்டுள்ளோம். அனைவருக்குமான இந்தியாவை உருவாக்க வேண்டியது நமது கடமை.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.