கேரளாவில் கனமழை எதிரொலியால் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவிற்கு விரைகிறார்.
கேரளா மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பேய் மழை கடந்த வாரங்களுக்கும் மேல் கொட்டி தீர்த்தது. இதனால், அணைகள், ஏரிகள் நிரம்பியதை அடுத்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரளாவின் பல மாவட்டங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் நிலச்சரிவில் வீடுகளை இழந்தும் தவித்து வருகின்றனர். கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்டட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு இன்று மாலை முடிந்த பிறகு, கேரளாவிற்கு பிரதமர் மோடி புறப்படுகிறார், பின்னர் நாளை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாக உள்ளது.