பள்ளிகளுக்கு ஆதார் ஆணையத்தின் உத்தரவு

ஆதார் ஆணையத்தின் உத்தரவு

Sep 6, 2018, 08:33 AM IST

ஆதார் எண் இல்லாத காரணத்துக்காக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது என்று ஆதார் ஆணையம் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Aadhaar

ஆதார் அடையாள அட்டை ஆணையம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், “ஆதார் எண் இல்லாத காரணத்துக்காக, சில பள்ளிகள் மாணவர்களை சேர்க்க மறுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆதார் எண் இல்லாததற்காக, எந்த குழந்தையையும் பள்ளியில் சேர்க்க மறுக்கக்கூடாது என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அவ்வாறு சேர்க்க மறுப்பது செல்லாது. சட்டப்படி அனுமதிக்கத்தக்கதும் அல்ல. ஆதார் எண் ஒதுக்கப்படும்வரையில், வேறு அடையாள அட்டைகள் மூலம் அம்மாணவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

மேலும், பள்ளியிலேயே ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

You'r reading பள்ளிகளுக்கு ஆதார் ஆணையத்தின் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை