ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Sep 6, 2018, 08:55 AM IST

ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.

Earthquake

ஹொக்கைடோ தீவில் இன்று அதிகாலை 3.08 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், சுமார் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் அங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

ஹொக்கைடோ தீவில் சுமார் 1.9 மில்லியன் மக்கள் வாழகின்றனர். இந்தத் தீவின் தலைநகரான சப்போரோவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏராளமானோர் இடங்களில் கட்டிடங்கள் இடிந்துள்ளன.

இந்நிலையில், மீட்பு பணிகளில் ஈடுபட்டுவரும் பேரழிவு மேலாண்மை நிறுவனம், நிலநடுக்கத்தால் அட்ஷூமா பகுதியில் பலர் காணாமல் போயுள்ளதாக கூறியுள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள டோமரி அணுமின்நிலையத்தில் இயங்கி வரும் மூன்று உலைகள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அணுமின்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You'r reading ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை