ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் விநாயகரின் 20 அடி உருவம் பதிந்த மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
pc: twitter@socialmedia
ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். கடற்கரை மணலில் இவர் உருவாக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் பார்ப்போரை வியக்க வைக்கும். இவர் பத்மஸ்ரீ விருது வென்றுள்ளார்.
நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியான இன்று பசுமையை வலியுறுத்தும் வகையில் பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் கடவுள் விநாயகரின் 20 அடி உருவம் பதிந்த மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
விநாயகரின் மணல் சிற்பத்தை வரைந்து அதன் கீழே பசுமையை காப்போம், பிளாஸ்டிக் குப்பைகளை வெல்வோம் எனவும் மண்ணில் எழுதியுள்ளார்.
பசுமையை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ள விநாயகரின் மணற்சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது வருகின்றது.