சுறா மீனை செல்லப்பிராணியை வளர்ப்பதில் பலருக்கும் நாட்டம் இருப்பதில்லை. காரணம் அவை ஆபத்தான உயிரனம் மற்றும் நம் மீன் தொட்டியில் உள்ள மற்ற மீன்களை இரையாக்கி விடும் என்பதாலேயே.
அதனால், நீங்கள் சுறாவை வளர்க்க வேண்டுமானால் அதற்கென தனிய தொட்டி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் மகிழ்ச்சியுடன் சுற்றி திரியும்.
சரளை மண் தேவை - பாலா சுறா மீன் உங்கள் மீன் தொட்டியில் சரளை மண் அடியில் இருக்க வேண்டும். ஆனால் 1/4-1/2 இன்ச் வரைக்கு மட்டுமே இது போடப்பட்டிருக்க வேண்டும். சுறாக்களுக்கு சரளை மண் என்றால் பிரியம். தொட்டியில் சுற்றி திரியும் போது அது இதனை கிளறி விட்டு விளையாடும்.
அளவுக்கு அதிகமாக பரவி கிடத்தல் - பாண்டெட் மூங்கில் சுறா உங்கள் தொட்டி செடிகள், ஃபில்ட்டர் மற்றும் இதர மீன்களால் பரவி கிடக்கக்கூடாது. நடுத்தர அளவிலான தொட்டியில் ஒரு சுறாவும், பெரிய அளவிலான தொட்டியில் 8 சுறாவும் போடலாம்.
ஃபில்ட்டர் - வெண்ணிற புள்ளிகளை கொண்ட மூங்கில் சுறாக்கள் சுறா மீன்களை வீட்டில் சிறப்பாக பராமரிக்க, எலெக்ரிகல் ஃபில்ட்டர்களை பயன்படுத்த வேண்டும். இது தானாகவே உங்கள் தொட்டியை சுத்தப்படுத்தும்.
சுவாசிப்பதற்கு - நர்ஸ் சுறாக்கள் உங்கள் தொட்டிக்கு ஏர் பம்ப் அவசியமானதாகும். இல்லையென்றால் உயிருடன் இருக்கும் செடிகளை தொட்டியில் போட்டு சுறாவை பராமரிக்க வேண்டும்.
உணவு வகை - கோரல் பூனை சுறா சீவல் உணவு, உறைந்த-காய்ந்த இரத்தப்புழுக்கள் மற்றும் ட்யூபிஃபெக்ஸ் ஆகியவைகளே இவைகளுக்கு சிறந்த உணவாக விளங்குகிறது.
தொட்டியின் அலங்காரம் - வானவில் சுறா சுறாவை வீட்டில் வளர்க்க, உங்களிடம் பெரிய மீன் தொட்டி இருக்க வேண்டும். அதில் மரம், பாறைகள் மற்றும் அடர்ந்த செடியினத்தை விட வேண்டும்
சமுதாயங்கள் - சிகப்பு வால் சுறா மிதமான மூர்க்க குணத்துடன் இருக்கும் சுறா வகைகளை மட்டுமே உங்கள் தொட்டியில் விடுங்கள்.
தொட்டியை சுத்தம் செய்தல் - நீல டார்பெடோ சுறா சுறாவை வீட்டில் நல்லபடியாக பராமரிக்க, ஒவ்வொரு வாரமும் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும். அப்போது தான் சரளை மண் மீது படியும் சிதைவு பொருட்கள் அகலும்.
மீன் இறக்கும் போது - அப்பலோ சுறா மீன் இறக்கும் போது அதனை தொட்டியில் இருந்து உடனே அகற்ற வேண்டும்.
உணவளித்தல் - வெள்ளி சுறா சுறாக்களை சிறந்த முறையில் பராமரிக்க அதற்கு அளவுக்கு அதிகமான உணவை அளிக்க கூடாது. சுறாக்கள் அதிகமாக உண்ணாது.
இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணாலே போதும் ஈஸியா உங்க மீனை வளர்த்திடலாம்.