திருப்பதி பிரம்மோற்சவ விழா கோலாகலம்...

திருமலை கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, மலையப்ப சுவாமி சிறிய சேஷ வாகனத்தில் வீதி உலா வந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இன்றைய தினம் சிறப்பு அலங்காரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் மாட வீதிகளில் பெருமாள் வீதி உலா வந்தார்.

மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள், கோவிந்த கோவிந்தா என கோஷம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர். சேஷ வாகனத்தின் முன்னால், ஆண்கள், பெண்கள், பஜனைபாடிச் சென்றனர். சில பெண் பக்தர்கள் கோலாட்டம், பரதநாட்டியம் ஆடியபடி வீதி உலா வந்தனர்.

முக்கிய நிகழ்வான கருட சேவை 17ஆம் தேதியும்,18ஆம் தேதி தங்க ரத ஊர்வலம், 20ஆம் தேதி தேரோட்டம், 21ஆம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற உள்ளன. விழாவை பார்க்க 31 இடங்களில் எல்.இ.டி. தொலைக் காட்சிகள் அமைக்கப்படுள்ளன. மேலும், 11 முதலுதவி மையங்கள், 12 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் அலிபிரி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். கருட சேவையின் போது, கூடுதலாக 1,500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 650 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வரும் 21ஆம் தேதி வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஆர்ஜித சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வழங்குவதற்காக 7 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Actor Arvindasamy case of Sathuranga Vettai 2

சதுரங்க வேட்டை-2 படத்துக்கான சம்பள பாக்கி ரூ.1.79 கோடியை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத...

Rahul will give a change of people - Robert Vadra

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவார் என சோனியாக...

Devotees Count decrease in Tirupati

கும்பாபிஷேகத்தையொட்டி, பக்தர்கள் வருகை குறைந்ததால் திருப்பதி ஏழுமலையான் கோயில் வெறிச்சோடி காணப்படுகி...

The first place to Pune, Chennai for 14th place .. Guess what?

கவலையின்றி மக்கள் வசிக்கும் நகரங்களில் புனேவிற்கு முதலிடமும், சென்னைக்க 14வது இடமும் கிடைத்துள்ளது....

Gold smuggling ... Who is this sparrow?

தங்கம் கடத்தல் புகாரின் எதிரொலி, திருச்சி விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் உள்பட 19 பேரை சிப...

Statue Smuggling case changed for CBI in Political motivation - MK Stalin

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக திமுக செ...