விஞ்ஞானி நம்பி நாராயணன் வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Nambi Narayanan

இஸ்ரோ மையத்தில், திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த முக்கியமான விஞ்ஞானி நம்பி நாராயணன். இவரது தொழில்நுட்பத் திறமையின் காரணமாகவே, தற்போது பி.எஸ்.எல்.வி ரக உள்நாட்டுத் தயாரிப்பு ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டுவருகின்றன.

இவர், அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாக, கடந்த 1994ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். 50 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்ட நம்பி நாராயணனை கேரள மாநில உயர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, நம்பி நாராயணன் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என தெரிவித்ததை தொடர்ந்து, அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, தனது தொழில் திறமையை முடக்கும் வகையிலும், குடும்பத்தினருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் சிபி மேத்யூஸ், விஜயன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், நஷ்டஈடு வழங்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேரள மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

more headlines in our related posts

Related # news