விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், கலந்து கொண்டு டைட்டில் வென்ற நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ் சீமராஜா படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
அதே நிகழ்ச்சியில், அவருடன் சக போட்டியாளராக களமிறங்கிய அவரது மனைவி ராஜலட்சுமிக்கு, தற்போது கணவருடன் இணைந்து சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில், 2002ம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் படத்தின் 2ம் பாகம் 16 ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது இயக்கத்திலேயே உருவாகி வருகிறது. இந்த படத்தில், பிரபுதேவா நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாடி வைரலான ‘சின்ன மச்சான்’ பாடலை சார்லி சாப்ளின் -2 படத்தில் அப்படியே இசையமைப்பாளர் அம்ரிஷ் பயன்படுத்தியுள்ளார். இப்பாடலின் லிரிக்கல் விடியோவை படக்குழுவினர் தற்போது யுடியூபில் வெளியிட்டுள்ளனர்.
பாடலை பார்த்து ரசிங்க...