நாட்டின் நிதி பற்றாக்குறை அளவை 3.3 சதவீதத்தை கடக்க விடமாட்டோம் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி அளித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரிப்பு மற்றும் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவற்றை தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இரு தினங்கள் நடந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டின் நிதி பற்றாக்குறை அளவு 3.3 சதவீதத்தை கடக்க விட மாட்டோம். கடந்தாண்டு கணிக்கப்பட்ட இலக்கையும் கடந்து இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என நம்புகிறோம். பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது." எனக் கூறினார்.
"நடப்பாண்டு வருமான வரி வசூல் அதிகரித்துள்ளதால், செலவினங்களை சரி கட்ட ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி மூலம் கிடைக்கும் பணம் உதவிகரமாக இருக்கும் என அருண் ஜெட்லி நம்பிக் தெரிவித்தார்.