கேபின் அழுத்தத்தால் பயணிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசர அவசரமாக மும்பையில் தரையிறங்கியது.
மும்பையில் இருந்து ஜெய்பூருக்கு சுமார் 166 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்படும் போது கேபின் அழுத்தத்தை பராமரிக்கும் சுவிட்சை ஆன் செய்ய விமானி மறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
சில பயணிகளுக்கு காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வரத்தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவசர அவசரமாக மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. விமானத்தினுள் உள்ள காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்காமல் விமானத்தை இயக்கியதே பயணிகளின் உடல் உபாதைகளுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.