இந்த ஆண்டு உலகை வென்றவர்கள் யாருனு தெரியுமா? ஐ.நா.

Sep 27, 2018, 11:06 AM IST

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்காற்றியவர்களுக்கு ஐ.நாவால் வழங்கப்படும் மிக உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பான ஐ.நா. ஆண்டுதோறும், ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ உலகை வென்றவர்கள் என்ற விருதை வழங்குகிறது. சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கிய பங்காற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிக்காகவே பிரதமர் மோடிக்கும், பிரான்ஸ் அதிபருக்கும் இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை பிளாஸ்டிக் அல்லாத நாடாக மாற்றும் மோடியின் முயற்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாகவும் இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல், இயற்கை வளங்களைப் பயன்படுத்தாமல், சூரிய சக்தி, காற்றலை சக்தி உள்ளிட்ட ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தும் கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்கும் ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது வழங்கப்படுகிறது.

You'r reading இந்த ஆண்டு உலகை வென்றவர்கள் யாருனு தெரியுமா? ஐ.நா. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை