பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்கள் வங்கிக்கணக்கில் இருந்து ஒருநாளில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் உச்சவரம்பை நாற்பதாயிரம் ரூபாயில் இருந்து இருபதாயிரம் ரூபாயாகக் குறைத்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிக்கணக்கில் இருந்து ஒருநாளில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் உச்சவரம்பு நாற்பதாயிரம் ரூபாயாக இருந்தது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் ஒருநாளில் பணம் எடுக்கும் உச்சவரம்பை நாற்பதாயிரம் ரூபாயில் இருந்து இருபதாயிரம் ரூபாயாகக் குறைக்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.
கிளாசிக் மேஸ்ட்ரோ வகை ஏடிஎம் அட்டைகளுக்கான இந்தக் குறைப்பு அக்டோபர் 31முதல் நடைமுறைக்கு வருகிறது. மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை ஆகியவற்றை ஊக்குவிக்கவும் பணம் எடுக்கும் வரம்பை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.