ராஜஸ்தானில் டாக்டர்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

by Isaivaani, Dec 28, 2017, 15:37 PM IST

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 12 நாட்களாக நடத்தி வந்த வேலைநிறத்த போராட்டத்தை டாக்டர்கள் வாபஸ் பெற்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கடந்த 16ம் தேதி முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களை ரேஸ்மா சட்டத்தின் மூலம் போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் அரசு அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக கூறியும் டாக்கடர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுடன் சுகாதார துறை அமைச்சர் காளிச்சரண், போக்குவரத்து துறை அமைச்சர் யூனுஸ் கான், மாநில பாஜக தலைவர் அசோக் பர்னாமி ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தனர்.
இதில், டாக்டர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தது. இதை தொடர்ந்து, தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், “ எங்களின் கோரிக்கையை அரசு ஏற்பதாக உறுதி அளித்துள்ளது. அரசின் முடிவால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதையடுத்து, நாங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம்” என தெரிவித்தனர்.

You'r reading ராஜஸ்தானில் டாக்டர்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை