விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று ஆசைப்பட்ட இயக்குநர்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் இரும்புத்திரை. இந்தப் படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, முக்கிய வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

Dec 28, 2017, 16:11 PM IST

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, முக்கிய வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய விஷால், “மித்ரன் இந்த கதையை எனக்கு கூறும்போது இது எனக்கு சரியான கதையாக இருக்கும் என்று தோன்றியது. `துப்பறிவாளன்’ படத்துக்கு பின்பு இந்த படம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

இரும்புத்திரை என்னுடைய கேரியரில் மிக முக்கியமான திரைப்படம். முதல் முறையாக சமந்தாவுடன் வேலை செய்கிறேன். ஒரு அழகான நபர். சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரச்சனைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும். படத்தில் காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்துள்ளன.

இரும்புத்திரை’ முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை கட்டாயம். அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது.

நான் ஆர் கே நகர் தேர்தலில் போட்டியிடக் கூடாதென்று பலர் வேண்டிக்கொண்டனர். அதில் இந்தப் படத்தின் இயக்குனர் மித்ரனும் ஒருவர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிட்டால் இந்தப் படம் இன்னும் தாமதமாகுமென்பதால் மற்றவர்களுடன் சேர்ந்து மித்ரனும் வேண்டிக்கொண்டான். இந்த இரும்புத்திரை படம் தாமதமானதால் நான் இன்றும் அதற்கு வட்டி கட்டிக்கொண்டுதான் இருக்கேன்.

நான் இந்த தேர்தலில் நின்றதன் காரணம், நான் சுயநலமாக சிந்திக்காமல் இந்த சினிமா துறைக்காக ஏதேனும் நல்லது செய்யணும் என்ற எண்ணம் தான். பணத்தை இன்னைக்கி நான் விட்டா கூட என்றோ ஒரு நாள் சம்பாரித்து விடலாம். சோறு போட்ட துறைக்கு ஏதேனும் செய்யணும். அதனால தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்க வேண்டிய கட்டாயம் வந்தது.

சொன்னதை செய்துகொண்டே இருக்கிறோம். தமிழக அரசு தயாரிப்பாளர்களுக்கான மானியம் தர ஒப்புக்கொண்டுவிட்டது, அதற்கு நன்றி தெரிவித்தோம். அதை அப்படியே பொங்கலுக்குள் நிறைவேற்றி வைத்தால் அந்தக் குடும்பங்கள் சந்தோசமாக பொங்கல் கொண்டாடும்

எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் உமேஷ் மற்றும் என்னுடைய நெருங்கிய நண்பர் யுவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மொத்த டீமும் சிறப்பாக பணியாற்றி உள்ளோம். இந்த படத்தின் இசை வெளிட்டு விழா ஜனவரி 6-ல் மலேசியாவில் நடைபெற உள்ளது” என்றார்.

You'r reading விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று ஆசைப்பட்ட இயக்குநர் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை