உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் இயங்கிவருகிறது போலியோ தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனம். அங்கு தயாரிக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்துகள், நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.
நாடெங்கும் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என வழங்கப்பட்டு வரும் போலியோ சொட்டு மருந்து, குழந்தைகளை இளம்பிள்ளை வாதம் என்ற நோய் தாக்காமல் இருக்க வழங்கப்பட்டு வருகிறது.
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட நிலையில் அண்மையில் வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்துகள் வைரசால் தாக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணையை துவங்க அரசுகள் களத்தில் குதித்துள்ளன. மேலும் வைரஸ் தொடர்பாக மத்திய அரசு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் விசாரணையை துவக்க உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் சமீபத்தில் அடுத்தடுத்து குறிப்பிட்ட இடைவேளையில் குழந்தைகள் உயிரந்துள்ளன. அதற்கு காரணம் இந்த போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
குழந்தைகள் பலியானதற்கு வைரஸ் தாக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து கொடுத்தது தான் காரணம் ? அல்லது வேறு காரணமா ? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் காஸ்யபாத்தில் தயாரிக்கப்பட்ட இந்த போலியோ சொட்டுமருந்து நாடு முழுவதும் விநியோகிக்கபட்டுள்ளது. அதனால் வழங்கப்பட்ட போலியோ மருந்துகளை கொஞ்ச நாட்களுக்கு விற்க தடை விதித்து அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.