TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்-அக்டோபர் 2018

by Manjula, Oct 3, 2018, 12:02 PM IST

TNPSC போன்ற அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற தினமும் படிக்கவேண்டிய நடப்பு நிகழ்வுகள்.

தமிழகம்

  1. கடந்த 2008-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொழிலக வேலைவாய்ப்புச் சட்டத்தை அமல்படுத்த கால அவகாசம் வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தியா

  1.  கடந்த 4 நிதியாண்டுகளில், எம்.பி.க்களுக்கு ஊதியம், சலுகையாக ரூ.1997 கோடி அளிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது.
  2. அதிநவீன எஸ்-400 டிரையம்ப் ரக ஏவுகணைகளை ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் இந்த வாரம் கையெழுத்தாக உள்ளது.

உலகம்

  1. மகாத்மா காந்திக்கு அமெரிக்காவின் உயரிய விருதான நாடாளுமன்ற தங்கப் பதக்கம் வழங்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
  2. அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸைச் சேர்ந்த ஜெனார்டு மோரூ, கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்ட்ரிக்லாண்ட் ஆகிய அந்த மூவரும், லேசர் சிகிச்சைகளுக்குப் பயன்படும் ஒளியியல் (ஆப்டிகல்) லேசர்களைக் கண்டுபிடித்தமைக்காக அவர்களுக்கு நோபல்பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்தது.

விளையாட்டு

1.ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் கொடியேந்தி தலைமை தாங்கிச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

  1. உலக வசிப்பிட தினம்
  2. ஈராக் விடுதலை தினம்(1932)
  3. கொஜொசியோன் நாடு(தற்போதைய கொரியா) டங்கூன் வாங்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது(கிமு 2333)

TNPSC போன்ற அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற தினமும் படிக்கவேண்டிய நடப்பு நிகழ்வுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

You'r reading TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்-அக்டோபர் 2018 Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை