முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இவ்வளவா!

அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Oct 4, 2018, 23:01 PM IST

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டிலில் முகேஷ் அம்பானி 11-வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார்.

Mukesh Ambani

பிரபல போர்பஸ் பத்திரிக்கை நடப்பாண்டுக்கான இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார்.

அம்பானியின் சொத்து மதிப்புகள் சுமார் 47.3 பில்லியன் டாலர்கள் ஆகும். இதன் இந்திய மதிப்பு ஏறத்தாழ 4 ஆயிரத்து 700 கோடியாகும். இந்த வருடம் மட்டும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 9.3 பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது. இந்திய மதிப்பின்படி சுமார் 900 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. ஜியோ அதிரடி அறிவிப்பு முகேஷ் அம்பானிக்கு சந்தையில் பெரும் பயனளித்து வருகின்றது.

விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி 2 ஆயிரத்து 100 கோடியுடன் இரண்டாம் இடத்தையும், அர்செலோர் மித்தல் குழுமத்தின் தலைவர் லக்‌ஷ்மி மித்தல் ஆயிரத்து 800 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஹிந்துஜா சகோதர்கள், ல்லோஜி மிஸ்ட்ரி, தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார், கோத்ரேஜ் குழுமம், திலீப் சங்வி, குமார் பிர்லா மற்றும் கௌதம் அதானி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

100 பேர் கொண்ட பட்டியலில் 4 பெண்கள் மட்டுமே இந்த ஆண்டில் இடம் பெற்றுள்ளனர். பயோடெக்னாலஜி துறையில் புகழ்பெற்று விளங்கும் கிரண் மஸும்தர் ஷா இப்பட்டியலில் 39-ம் இடம் பிடித்துள்ளார்.

சர்வதேச சந்தைகளில் ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்த போதிலும் இந்த பட்டியலில் சுமார் 11 பேர் தங்களின் சொத்து மதிப்பினை 1 பில்லியன் டாலர்கள் வரை அதிகரித்துள்ளனர். இந்த பட்டியலில் ஐந்து நபர்கள் புதிதாக இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இவ்வளவா! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை