காற்று மாசு அதிகரிப்பதை குறைக்கும் விதமாக, மாதத்திற்கு ஒரு நாள் மட்டும் கார்களை இயக்க பிரான்ஸ் தலைநகர் பாரீசில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தான் காற்று மாசுவின் அளவு அதிகமாக உள்ளது. இதனால், காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில், அந்நகர நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கார்களில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் காற்றில் மாசு அதிகளவில் கலப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, பாரீசில் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் முக்கிய பகுதிகளில் கார்களை இயக்க தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்கள், மிதி வண்டிகள் மற்றும் சாலையோர நடைபாதை ஆகியவற்றை அன்று ஒரு நாள் மட்டும் பொது மக்கள் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவற்றை தவிர, மருத்துவ அவசர வாகனங்கள், டெலிவரி வாகனங்கள் உள்ளிட்டவைக்கு மட்டும் அன்று தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதை அடுத்து, அதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், இரட்டை இலக்க எண்களை கொண்ட கார்களை மட்டும் இயக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.