ஐந்து மாநிலங்களுக்கு ஒரே நாளில் தேர்தல் முடிவு!!

ஐந்து மாநிலங்களுக்கு ஒரே நாளில் தேர்தல் முடிவு

by Vijayarevathy N, Oct 6, 2018, 19:30 PM IST

தேர்தல் ஆணையம் ஐந்து மாவட்டங்களுக்கும் ஒரே தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அம்மாநிலங்கள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகும்.

ராஜஸ்தான் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டசபைப் பதவிக்காலம் விரைவில் முடியவிருப்பதால் அம்மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் இன்று செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் நடைப்பெறும் தேதிகளை அறிவித்தார். சட்டீஸ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டமாக நவம்பர் 12-ஆம் தேதியும்,  நவம்பர் 20-ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் நக்ஸலைட் அச்சுறுத்தல் அதிகமாக  உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் நவம்பர் 28-ந்தேதியும் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் டிசம்பர் 7-ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் முடிவுகளும், டிசம்பர் 11-ந்தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தல்களில் முதன் முதலாக வாக்காளர்கள் யாருக்கு வாக்கு அளித்திருக்கிறார்கள் என்பதை அறியும் பதிவுச் சீட்டும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading ஐந்து மாநிலங்களுக்கு ஒரே நாளில் தேர்தல் முடிவு!! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை