#Metoo என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான சீண்டல்களை மீடூ என்ற ஹேஷ்டேக் மூலம் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் அந்த வகையில் ஷீனா என்ற பத்திரிகையாளர் ஒருவர் தனது பெண் நண்பர்களுக்கு நேர்ந்த துன்புறுத்தல்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதில் ஒரு பதிவில் வாட்ஸ்ஆப் உரையாடல் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட்கள் இருந்தன.
இந்நிலையில் பிரபல ஆங்கில எழுத்தாளர் சேத்தன் பகத் தமக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக, பெண் பத்திரிகையாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.
அதை ஒப்புக்கொண்ட எழுத்தாளர் சேத்தன் பகத் அந்த பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக பேஸ்புக்கில் எழுதியுள்ளார். மேலும் இந்த தவறுக்காக தமது மனைவியிடமும் மன்னிப்புக் கோருவதாக பேஸ்புக் பக்கத்தில் எழுத்தாளர் சேத்தன் பகத் கூறியுள்ளார்.