பஞ்சாப்பில் தசரா விழாவின்போது கோர விபத்து: ரயில் மோதி 60 பேர் பலி

60 people killed in train accident in Dasara festival in Punjab

by Isaivaani, Oct 20, 2018, 08:18 AM IST

பஞ்சாப் மாநிலம், அமர்தசரஸ் நகர் அருகே ராவணன் கொடும்பாவி எரிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசஸ் நகர் அருகே சவுரா பஜார் பகுதியில் நேற்றிரவு தசரா விழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் இறுதியில், பல அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டது. இது கொளந்துவுட்டு எரியும் காட்சியை ஏராளமான மக்கள் ரயில்வே கேட்டின் தண்டவாளத்தின் அருகே நின்றுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் தண்டவாளத்தின் வழியாக வந்த ரயில் மக்கள் மீது வேகமாக மோதி கடந்து சென்றது. இதில், ஏராளமான மக்கள் ரயிலின் அடிப்பட்டு தூக்கி வீசப்பட்டனர். இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். பலர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த கோர விபத்துக்கு தசரா விழா குழுவினரின் அஜாக்கிரதையே காரணம் என்று குற்றம்சாட்ட்பபட்டுள்ளது. ரயில் வரும் நேரம் குறித்து குழுவினர் மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரித்திருந்தால் இத்தனை உயிர்கள் பிரிந்திருக்காது எனவும் மக்கள் கொந்தளித்துள்ளனர்.

சுமார் 60 உயிர்களை பறித்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You'r reading பஞ்சாப்பில் தசரா விழாவின்போது கோர விபத்து: ரயில் மோதி 60 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை