புதுடெல்லி: டெல்லியில் கடும் பனி மூட்டம் ஏற்படுவதால், 6 விமானங்கள், 21 ரயில்களின சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லி வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பருவ மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கியது முதல் பனிப்பொழிவு அதிகமாக உணரப்படுகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் பனி மூட்டம் அதிகளவில் இருப்பதால் குளிரில் வெளியே வராமல் மக்கள் வீட்டிற்குள்ளேயே தஞ்சம் அடைந்து உள்ளனர்.
காலை வேளையில் கூட பனிமூட்டம் குறையாமல் இருப்பதால், வேலைக்கு செல்லும் நபர்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, டெல்லியில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் பனி மூட்டம், போக்குவரத்து சேவையை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில், விமானங்கள் மற்றும் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றும் கடும் பனிமூட்டம் நிலவுவதால், இதன் காரணமாக இன்று டெல்லிக்கு வரும் 64 ரயில்கள் தாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 24 ரயில்களின் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 21 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், 20 விமானங்கள் தாமதமாக செல்லும் எனவும், 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.