தகுதி வாய்ந்தவர்கள் நாட்டின் எந்த மாநிலத்துக்கும் தலைவராகலாம் என்பதே இந்தியனான என் நிலைப்பாடு என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மராட்டியத்தை பிறந்த மண்ணாக கொண்டுள்ள ரஜினிகாந்த் சமீபத்தில் தமிழக அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்று தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
தவிர கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என்று பேசியதாக செய்தி வெளியானது. இதனையடுத்து பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் விளக்கமளித்துள்ள பிரகாஷ்ராஜ், ”தகுதி வாய்ந்தவர்கள் நாட்டின் எந்த மாநிலத்துக்கும் தலைவராகலாம் என்பதே இந்தியனான என் நிலைப்பாடு.
கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உட்பட எந்த மாநிலமாக இருந்தாலும், பிரித்தாளும் தன்மை கொண்ட, வகுப்புவாத அரசியல்வாதிகளை இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெற விடமாட்டோம் என்றுதான் பேசினேன். என்னுடைய பேச்சை திரித்து பிரசாரம் செய்து, வெறுப்பு உணர்வை தூண்டுவதன் மூலம் உங்களிடம் பயம் தெரிகிறது. அது உங்களின் விரக்தி மனநிலையையே உறுதிப்படுத்துகிறது'' என்று தெரிவித்துள்ளார்.