அதிமுகவில் இந்த 12 பேருக்கு மட்டுமே உரிமை இருக்கிறது வேறு யாருக்கும் இல்லை

புதிதாக நியக்கப்பட்டுள்ள 12 செய்தி தொடர்பாளர்களை தவிர வேறு யாருக்கும் பேட்டி அளிக்கவோ, கட்சி நிலைப்பாடு குறித்து ருத்து தெரிவிக்கவோ உரிமை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jan 3, 2018, 14:45 PM IST

புதிதாக நியக்கப்பட்டுள்ள 12 செய்தி தொடர்பாளர்களை தவிர வேறு யாருக்கும் பேட்டி அளிக்கவோ, கட்சி நிலைப்பாடு குறித்து ருத்து தெரிவிக்கவோ உரிமை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு அதிமுக அவசரக்குழு கூட்டம் கடந்த வாரம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் டிடிவி ஆதரவாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டனர். சிலர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் அதிமுக செய்தி தொடர்பாளர்களாக 12 பேரை நியமித்து உத்தரவிட்டுள்ளனர். இவர்களில் சிலர் ஏற்கெனவே ஜெயலலிதா காலத்திலேயே அப்பொறுப்பில் இருந்தவர்கள்.

புதிதாக நியமிக்கப்பட்ட 12 செய்தி தொடர்பாளர்கள் விவரம் வருமாறு: 1.பொன்னையன்,
2.வளர்மதி,
3. கோகுல இந்திரா,
4. வைகைச்செல்வன்,
5. கே.சி.பழனிசாமி,
6. சமரசம்,
7. கோவை செல்வராஜ்,
8. ஜெ.சி.டி.பிரபாகரன்,
9. மருது அழகுராஜ்,
10.தீரன்,
11.மகேஷ்வரி,
12.பாபு முருகவேல்

ஆகிய 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர இந்திய தேசிய லீக் கட்சியின் ஜவஹர் அலி க்கு மட்டும் கூடுதலாக பேசுவதற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 12 பேர் தவிர வேறு யாரும் கட்சியின் நிலைப்பாடு குறித்தோ மற்றவர்கள் கருத்து குறித்தோ பேட்டியோ, சமூக வலைதளங்களில் கருத்துக்களோ பதிவு செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

You'r reading அதிமுகவில் இந்த 12 பேருக்கு மட்டுமே உரிமை இருக்கிறது வேறு யாருக்கும் இல்லை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை