827 ஆபாச இணையதளங்கள் முடக்கம்

Block 827 porn websites dot asks internet providers

Oct 25, 2018, 18:38 PM IST

நாடு முழுவதும் 827 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச அளவில் இந்தியாவை குறிவைத்து ஏராளமான ஆபாச இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆபாச இணையதளங்களை முடக்கக் கோரி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, 827 ஆபாச இணையதளங்களை முடக்க உத்தரவிட்டார்.


இதனை தொடர்ந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆய்வை மேற்கொண்டது. நீதிமன்ற உத்தரவுப் பட்டியலில் உள்ள இணையதளங்களை முடக்குமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி, 827 ஆபாச இணைய தளங்கள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.



You'r reading 827 ஆபாச இணையதளங்கள் முடக்கம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை