நடிகர் அர்ஜூனின் நண்பர் மிரட்டுவதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூரு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி அர்ஜுன் நடிப்பில் வெளியான நிபுணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறினார்.
இந்த மீடூ புகாரை மறுத்த நடிகர் அர்ஜூன், நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. சுருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்தார்.
மேலும், பாலியல் புகார் சுமத்திய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக 5 கோடி ரூபாய் கேட்டு நடிகர் அர்ஜூன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை எதிர்கொள்வேன் என நடிகை ஸ்ருதி ஹரிகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அர்ஜூனின் நண்பர் பிரசாந்த் என்பவர் மிரட்டல் விடுப்பதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூரு ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.