பெங்களூரு பல்கலையில் கன்னடம் கற்கும் சசிகலா, இளவரசி

Sasikala, Ilavarasi learning Kannada language in prison

by Isaivaani, Oct 27, 2018, 17:54 PM IST

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு பல்கலையில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் பயிலும் வகுப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகளுக் படிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்ல சசிகலாவும், இளவரசியும் சிறையில் இருந்தபடியே, பெங்களூரு பல்கலையில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி கற்றுக்கொள்ள ஆர்வம் தெரிவித்தனர்.

அதன்படி, இளவரசி 15 நாள் பரோலில் வெளியில் வருவதற்கு முன்பே, இருவரும் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்த தகவலை பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வித்துறை இயக்குனர் மயிலரப்பா தெரிவித்துள்ளார்.

மேலும், சசிகலா, இளவரசியை தவிர, சிறையில் உள்ள சுமார் 257 கைதிகளும் பல்வேறு வகுப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்ததை அடுத்து, மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும், அவர்களுக்கு ஆசிரியர்கள் நேரடியாக சிறைக்கு வந்து பாடங்களை நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading பெங்களூரு பல்கலையில் கன்னடம் கற்கும் சசிகலா, இளவரசி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை