இதுகூட தெரியலையா ஸ்டாலின் - கருணாநிதியை, விஜயகாந்த் சந்திக்கவே இல்லை

தேமுதிக கட்சி தொடங்கியபோது, திமுக தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் சந்திக்கவில்லை ஸ்டாலின் கருத்துக்கு தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Jan 4, 2018, 17:31 PM IST

தேமுதிக கட்சி தொடங்கியபோது, திமுக தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் சந்திக்கவில்லை ஸ்டாலின் கருத்துக்கு தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தான் அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்து இருந்தார். ரஜினிகாந்த் அவர்களின் இந்த அறிவிப்பை அடுத்து தமிழக அரசியல் அவர் பக்கம் திரும்பியுள்ளது வெளியாகும் செய்திகள் அனைத்தும் அமைந்துள்ளன.

இந்நிலையில், ரஜினிகாந்த் தனது நீண்ட கால நண்பர் கருணாநிதி அவர்களை சந்திப்பதற்கு கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார்.

கருணாநிதி வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் கருணாநிதியை சந்தித்து வணக்கம் தெரிவித்த ரஜினிகாந்த், அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “திமுக தலைவர் கருணாநிதியை ரஜினி சந்திப்பது புதிதல்ல. இதில் அதிசயப்பட ஒன்றுமில்லை. சந்திப்பின்போது அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற வந்ததாக தெரிவித்தார். புதிய கட்சி தொடங்கும்போது விஜயகாந்தும் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்” என்றார்.

ஆனால், விஜயகாந்த் கட்சித் தொடங்கியபோது, கருணாநிதி-விஜயகாந்த் சந்திப்பு நடைபெறவில்லை என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறியுள்ள அவர், “தேமுதிக கட்சி தொடங்கியபோது, திமுக தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் சந்திக்கவில்லை நான் தான் அவரை சந்தித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading இதுகூட தெரியலையா ஸ்டாலின் - கருணாநிதியை, விஜயகாந்த் சந்திக்கவே இல்லை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை