ஸ்டிரைக் எதிரொலி: ஓட்டுநர், நடத்துநர் பணியில் சேர அழைப்பு

தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் பணியில் சேர தகுதியுள்ளவர்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

Jan 5, 2018, 13:10 PM IST

தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் பணியில் சேர தகுதியுள்ளவர்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

சென்னையில் நேற்று 13வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நேற்ற பேச்சுவார்ததையில் ஈடுபட்டனர். அப்போது, இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் இழுபறி நீடித்தது.

பேச்சுவார்த்தை தொடர்பான முடிவு குறித்து பேருந்து ஓட்டுனர்கள், கண்டக்டர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களிடம் விசாரித்துக் கொண்டே இருந்தனர். மாலை 6 மணி ஆகியும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், விரக்தி அடைந்த ஊழியர்கள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையடுத்து பேருந்துகளை நிறுத்தி ஊழியர்கள் போராட்டம் நடத்த தொடங்கினர். இதேபோல் தமிழகம் முழுவதும் இதே நிலை காணப்பட்டது. ஆங்காங்கே அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், அலுவலகம் முடிந்து வீடு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

மேலும், இன்று திமுக உள்பட 13 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறி அதிகாரப்பூர்வ ஸ்டிரைக் அறிவித்தனர். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் ஓடவில்லை.

இந்நிலையில், தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் பணியில் சேர தகுதியுள்ளவர்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

அதில், கனரக ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம் வைத்துள்ளவர்கள் சான்றிதழ்களுடன் அருகில் உள்ள போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர்களை அணுக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

You'r reading ஸ்டிரைக் எதிரொலி: ஓட்டுநர், நடத்துநர் பணியில் சேர அழைப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை