பிரான்சில் படிக்கணுமா? 10 ஆயிரம் இந்தியருக்கு விசா வழங்க ஏற்பாடு

Arranged 10 thousand visa study France

by Isaivaani, Nov 3, 2018, 22:27 PM IST

பிரான்சில் கல்வி பயில 10 ஆயிரம் இந்தியர்களுக்கு விசா வழங்கப்படும் என்று துணை தூதர் கேத்தரின் ஸ்வார்டு கூறியுள்ளார்.

இதுகுறித்து, பிரான்ஸ் நாட்டுக்கான தமிழகம்-புதுவை துணை தூதர் கேத்தரின் ஸ்வார்டு நிருபர்களிடம் பேசியதாவது: பிரான்சுக்கு கல்வி பயிலவும், வர்த்தகம், சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரான்சுக்கு சராசரி வருகையாளர் எண்ணிக்கை தற்போது 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

வரும் 2020ம் ஆண்டில் பிரான்சில் கல்வி பயில 10 ஆயிரம் பேர் இந்தியாவில் இருந்து விசா பெறும் வாய்ப்பு உள்ளது. பிரான்ஸ் தூதரகத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்கும் முறை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் புதுவையில் இருந்து பிரான்ஸ் செல்ல விசா விண்ணப்பங்கள் எண்ணிக்கை 34 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தென் இந்தியாவிலேயே அதிக அளவில் புதுவையில் இருந்து விண்ணப்பிக்கின்றனர். கொச்சியில் இது 51 சதவீதமாகவும், சென்னையில் 39 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading பிரான்சில் படிக்கணுமா? 10 ஆயிரம் இந்தியருக்கு விசா வழங்க ஏற்பாடு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை