சன் டிவியில் தீபாவளிக்கே 96 படம் த்ரிஷா பகிரங்க எதிர்ப்பு!

96 Movie telecasting in Sun TV for Diwali

by Mari S, Nov 3, 2018, 21:47 PM IST

சன் டிவியில் வரும் தீபாவளிக்கு 96 படம் ஒளிபரப்பப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கு நடிகை த்ரிஷா ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான 96 படம் 5வது வாரமாக 80% அரங்குகள் நிறைந்த படமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், வரும் செவ்வாயன்று தீபாவளி சிறப்பு திரைப்படமாக 96 ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ள த்ரிஷா, தயவு செய்து 96 ப்ரீமியரை பொங்கலுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு படத்தை அதற்குள் டிவியில் வெளியிடுவது படத்தை பாதிக்கும் என படக்குழுவினர் சார்பாக கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

You'r reading சன் டிவியில் தீபாவளிக்கே 96 படம் த்ரிஷா பகிரங்க எதிர்ப்பு! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை