சமீபத்தில்17 வயது சிறுமி 45 வயது ஆணை காதலித்து வீட்டைவிட்டு ஒடிய சம்பவம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அதில் அதிர்ச்சி என்னவென்றால் அன்று மட்டும் 8மனுக்கள் வந்துள்ளது இந்த சம்பவம் சமுதாயதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து பேசிய நீதிபதிகள் இன்று ஒரே நாளில் இதேப் போன்று திருமணம் ஆன ஆண்களுடன் டீன் ஏஜ் சிறுமிகள் ஓடிவிட்டதாகக் கூறி எட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்துள்ளது வேதனையாக உள்ளது. டீன் ஏஜ் பெண்காள் இது போல் வயதானவர்கள் மீது காதல் வயப்படுவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். காவல்துறையும், சமூக நலத்துறையும் இந்த விவகாரத்தை சீரியசாக எடுத்துக்கொள்ளவேண்டும். என அறிவுறுத்தியுள்ளார்கள், கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோல் எத்தனை சிறுமிகள் ஓடிச் சென்றுள்ளார்கள், அவர்களில் எத்தனைப் பேர் மீட்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்
மேலும் சிறுமிகளை காதல் போர்வையில் விட்டைவிட்டு அழைத்துச் செல்லும் ஆண்கள் மீது பாலியல் வழக்கு, ஆள் கடத்தல் பிரிவுகளில் கைது செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகள் மன நிலையே இதற்கான காரணம், சிறுவயது தனிமை யாரவது பாசமாக பேசினால் உடனே நம்பிவிடுகிறார்கள், இதனை தடுக்க குழந்தைகளுடன் குடும்பத்தில் உள்ளவர்கள் நேரம் அதிகமாக செலவழிக்க வேண்டும், பள்ளிகளும் நல்ல ஒழுக்கங்களை கற்றுத் தரவேண்டும். சினிமாவின் தாக்கம் தான் சிறுவயது பிள்ளைகள் காதல் வயப்படக் காரணம், எனவே சினிமாவில் நடிப்பவர்களும் கதை எழுதுபவர்களும் சமூதாய அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
இந்த தீர்ப்பை பற்றி ஹெச்.ராஜா டீன் -ஏஜ் பெண்கள் ஒடிப்போக திமுக தான் காரணம் என்றும் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தான் ஆத்திசூடியை எடுத்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்