இதற்கே வழியில்லை டிஜிட்டல் இந்தியா, செவ்வாய் கிரக குடியிருப்புகளா? - ஜிக்னேஷ் மேவானி

சமத்துவமாய் வாழ்வதற்கே பாடாய்ப்படும் வேளையில், டிஜிட்டல் இந்தியா குறித்தும், செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகள் அமைப்பது குறித்தும் பிரதமர் பேசிக் கொண்டிருக்கிறார் என்று ஜிக்னேஷ் மேவானி கேள்வி எழுப்பியுள்ளார்.

Jan 5, 2018, 21:36 PM IST

சமத்துவமாய் வாழ்வதற்கே பாடாய்ப்படும் வேளையில், டிஜிட்டல் இந்தியா குறித்தும், செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகள் அமைப்பது குறித்தும் பிரதமர் பேசிக் கொண்டிருக்கிறார் என்று ஜிக்னேஷ் மேவானி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோரேகான் யுத்தத்தில் வென்றதன் நினைவு நாளையொட்டி, டிசம்பர் 31-ஆம் தேதி, சனிவார்வாதா கோட்டையில் தலித் அமைப்புக்களின் சார்பில் விழா நடைப்பெற்றது.

டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தலித் சமூக தலைவரும் குஜராத் எம்எல்ஏ-வுமான ஜிக்னேஷ் மேவானி, ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா, ஜேஎன்யு மாணவர் தலைவர் உமர் காலித் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதற்காக, ஜிக்னேஷ் மேவானி மற்றும் உமர் காலித் ஆகிய இருவரின் மீதும் 153 ஏ, 505, 117 ஆகிய பிரிவுகளின் கீழ் புனே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தன் மீதான வழக்கு குறித்து, ஜிக்னேஷ் மேவானி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “சனிவார்வாதா கோட்டையில், வெறுப்பைத் தூண்டும் வகையில் நான் ஏதும் பேசவில்லை. என்னைப் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு - தலித் தலைவருக்கே இந்த நிலை என்றால் ஒரு சாதாரண ஏழை தலித்தின் நிலைமையை எண்ணிப் பாருங்கள்; அவர்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்?.

நாட்டில் சக மனிதர்களிடையே சமத்துவமாய் வாழ்வதற்கே பாடாய்ப்படும் வேளையில், பிரதமர் மோடியோ டிஜிட்டல் இந்தியா குறித்தும், செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகள் அமைப்பது குறித்தும் சந்திரனில் தண்ணீர் கண்டுபிடிப்பது குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

You'r reading இதற்கே வழியில்லை டிஜிட்டல் இந்தியா, செவ்வாய் கிரக குடியிருப்புகளா? - ஜிக்னேஷ் மேவானி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை