நடிகர் ரஜினிகாந்த் தனது அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்திற்குப் பதிலாக ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். அப்போது பேசிய ரஜினி, “நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். தனிக்கட்சித் தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதியிலும் போட்டியிடுவேன்” என்று அறிவித்தார்.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று அடுத்தக் கட்ட அறிவிப்பை ரஜினி வெளியிட்டுள்ளார். அதாவது, “www.rajinimandram.org” என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதில் விருப்பமுள்ள உறுப்பினர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என இன்று ரஜினி அறிவித்தார்.
இந்நிலையில், ரஜினிகாந்தின் தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக, தனது ரசிகர் மன்றத்தின் பெயரை மாற்றம் செய்துள்ளார். அதாவது, ஏற்கனவே இருந்த அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்திற்குப் பதிலாக புதிதாக ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் சூட்டியுள்ளார்.