பொது மக்கள் நலன் கருதி பராமரிப்பு பணி அறிவிப்பு வாபஸ்: தெற்கு ரயில்வே

by Isaivaani, Jan 6, 2018, 13:21 PM IST

பொது மக்கள் நலன் கருதி பராமரிப்பு பணி அறிவிப்பு வாபஸ்: தெற்கு ரயில்வே 
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் போராட்டம் தொடர்வதால், பொது மக்களின் நலன் கருதி பராமரிப்பு பணியை ஒத்திவைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இன்றுடன் மூன்றாவது நாளாக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
இதன் எதிரொலியாக, பொது மக்கள் பெரும்பாலானோர் மின்சார ரயிலில் பயணம் செய்கின்றனர். இதனால் ரயில்களில் அதிகளவில் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக சென்னை புறநகர்களுக்கு செல்லும் ரயில் சேவையில் இன்று மற்றும் நாளை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. குறிப்பாக, மூர்மார்க்கெட் &திருவள்ளூர், வேளச்சேரி---& திருவள்ளூர், திருவள்ளூர் &மூர்மார்க்கெட், திருவள்ளூர் &வேளச்சேரி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், சில ரயில்களின் வழித்தடங்கள் மாற்றியமைக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

ஆனால், பேருந்து வேலை நிறுத்தம் போராட்டம் நீடிப்பதால் பொது மக்களின் நலன் கருதி பராமரிப்பு பணி அறிவிப்பை தெற்கு ரயில்வே நிர்வாகம் தற்போது வாபஸ் பெற்றுள்ளது.

இதனால், அனைத்து வழித்தடங்களிலும் பராமரிப்பு பணித் திட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும் இந்த வழித்தடங்களில் வழக்கம்போல் இன்று அனைத்து ரயில்களும் இயங்கும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More Tamilnadu News


அண்மைய செய்திகள்