டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 6ஆயிரம் ரன் சேர்த்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 346 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 479 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகப்பட்சமாக உஸ்மான் கவாஜா 171 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 83 ரன்களும் குவித்தனர்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 44 ரன்கள் எடுத்திருந்த போது அதிவேக 6000 ரன்களை குவித்தவர் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக, டான் பிராட்மேன் [68 இன்னிங்ஸ்] அதிவேக 6ஆயிரம் ரன்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸின் ஜெர்ஃபீல்ட் சோபர்ஸ் [111] இன்னிங்ஸ்] சாதனையை சமன் செய்துள்ளார்.