இஸ்ரோவின் ஜிசாட்-29 செயற்கைக் கோள் வெற்றிகரமாக இன்று மாலை விண்ணில் பாய்ந்தது.
இஸ்ரோவின் 33வது செயற்கைக் கோள் ஜிசாட் 29. ரூ400 கோடி செலவில் இது உருவாக்கப்பட்டது.
ஜிசாட் 29- செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் நேற்று பகல் தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 5.08 மணிக்கு ஜிஎஸ்எல்வி மார்க் -3 டி2 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தகவல் தொடர்புத் துறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தக் கூடியது இந்த ஜிசாட் 29.
இச்செயற்கைக்கோள் பூமியில் இருந்து 36,000 கி.மீ தொலைவில் விண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும். 2020-ல் மனிதர்களை நாம் விண்ணுக்கு அனுப்பும் திட்டம் சாத்தியமாகும் என்றார்.
இதனிடையே ஜிசாட் 29 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.