மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ913 கோடி சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார் என்பது தொடர்பான வழக்கில் தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி என்பவர், ஜெயலலிதாவின் சொத்துகளின் மதிப்பு ரூ913 கோடி; இவற்றை நிர்வகிப்பது தொடர்பாக எந்த உயிலையும் ஜெயலலிதா எழுதவில்லை. ஆகையால் இந்த சொத்துகளை நிர்வகிக்க ஒருவரை நியமிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் ரத்த உறவுகளான தீபா, தீபக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருவரும் 5 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.