புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமத்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத் தலைமை தேர்தல் ஆணையராக இருப்பவர் ஓ.பி.ராவத்தின். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதியுடன் முடிகிறது.
புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் பொறுப்பை குடியரசுத் தலைவரிடம் உள்ளது. இதனால், இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை குடியரசுத் தலைவர் நியமனம் செய்தார். இவர், வரும் 2ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
சுனில் அரோரா..
ராஜஸ்தானை சேர்ந்தவர் சுனில் அரோரா. 1980ம் ஆண்டில் ஐஏஎஸ் முடித்து பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை மற்றும் திட்டக் கமிஷன் ஆகிய துறைகளில் பணியாற்றினார்.
5 ஆண்டுகள் இந்தியன் ஏர்லைன்ஸில் சேர்மேனாக பணியாற்றி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி ஓய்வு பெற்ற பிறகு, தேர்தல் ஆணையத்தில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.