பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

PSLV C-43 Rocket launch 28 hours countdown starts

by Devi Priya, Nov 28, 2018, 14:11 PM IST

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 9.57 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ராக்கெட்டில் இஸ்ரோ தயாரித்த பூமியை கண்காணிக்கும் வகையில், விண்வெளியில் இருந்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் ‘ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமராக்கள்’ கொண்ட ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் உயரத்திலும், வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்கள் 504 கிலோ மீட்டர் உயரத்திலும் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன.

பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டதாகும்.

இது இந்தியாவின் 45-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 28 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்று (புதன்கிழமை) காலை 5.57 மணிக்கு தொடங்கியது.  

You'r reading பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை